உங்கள் ஐபோன் பழையதாகிவிட்டதா? ஆப்பிளின் விண்டேஜ் பட்டியலில் அதிரடி மாற்றம்

உங்கள் ஐபோன் பழையதாகிவிட்டதா? ஆப்பிளின் விண்டேஜ் பட்டியலில் அதிரடி மாற்றம்

ஆப்பிள் நிறுவனம் தனது ‘விண்டேஜ்’ (Vintage) தயாரிப்புகள் பட்டியலில் ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 ஆகியவற்றை புதிதாகச் சேர்த்துள்ளது. ஒரு தயாரிப்பின் விற்பனை நிறுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்தால், அது விண்டேஜ் பட்டியலுக்கு மாற்றப்படும். தற்போது ஐபோன் 11 ப்ரோ சமீபத்திய iOS 26 மென்பொருளில் இயங்கினாலும், இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதால் அதன் அதிகாரப்பூர்வ பழுதுபார்ப்பு சேவைகளில் இனி சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

விண்டேஜ் பட்டியலில் உள்ள சாதனங்களுக்குத் தேவையான ஸ்பேர் பார்ட்ஸ்கள் (Spare parts) கையிருப்பில் இருந்தால் மட்டுமே ஆப்பிள் சேவை மையங்கள் பழுதுபார்த்து தரும். பார்ட்ஸ்கள் இல்லை எனில், நிறுவனம் எவ்வித உதவியும் செய்யாது. பொதுவாக ஒரு தயாரிப்பு நிறுத்தப்பட்டு 7 ஆண்டுகள் கடந்தால், அது ‘காலாவதியானது’ (Obsolete) எனக் கருதப்படும். அந்த நிலையை எட்டிய பிறகு, ஆப்பிள் நிறுவனம் அந்தச் சாதனங்களுக்கான அனைத்து ஹார்டுவேர் ஆதரவையும் முழுமையாக நிறுத்திவிடும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *