வெறும் 10 ஆயிரம் ரூபாயில் ஈரானில் நீங்கள் லட்சாதிபதி ஆனால் அங்குள்ள பொருளாதார நிலைமை என்ன தெரியுமா

உலகிலேயே மிகவும் மதிப்பு குறைந்த நாணயமாக ஈரானிய ரியால் 2025 டிசம்பர் நிலவரப்படி தொடர்கிறது. இந்திய ஒரு ரூபாயின் மதிப்பு சுமார் 468.78 ஈரானிய ரியாலுக்கு சமமாக இருப்பதால், வெறும் 10,000 இந்திய ரூபாயை மாற்றினால் சுமார் 46,87,800 ரியால்கள் கிடைக்கும். இது கேட்பதற்கு மிகப்பெரிய தொகையாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் அதீத விலைவாசி உயர்வால் இந்த பெரும் தொகையைக் கொண்டு மிகக் குறைந்த பொருட்களையே வாங்க முடியும் என்பதுதான் கசப்பான உண்மை.
சர்வதேச பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள முடக்கமே ஈரானிய நாணயத்தின் இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். அங்கு அதிகாரப்பூர்வமாக ரியால் புழக்கத்தில் இருந்தாலும், மக்கள் ‘தோமன்’ என்ற பெயரிலேயே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றனர். ஈரானுக்குச் செல்லும் பயணிகள் அங்கு சர்வதேச கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால், கையில் ரொக்கமாக டாலர் அல்லது யூரோவை எடுத்துச் செல்வது அவசியமாகும்.