கள்ளக்காதல் விவகாரத்தில் பிளாக்மெயில் தாங்க முடியாமல் 4 குழந்தைகளின் தந்தை தற்கொலை
January 2, 2026

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மிரட்டல் காரணமாக நான்கு குழந்தைகளின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீரம்சந்த் என்ற அந்த நபர் பக்கத்து வீட்டு பெண்ணுடன் பத்தாண்டுகளாக பழகி வந்த நிலையில், அந்த பெண் அவரை பிளாக்மெயில் செய்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுத்தார்.
தற்கொலைக்கு முன்னதாக பீரம்சந்த் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார், அதில் அந்த பெண் பணம் கேட்டு அழுத்தம் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் குறித்து அவரது மனைவிக்கு எதுவும் தெரியாத நிலையில், போலீஸார் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.