விளாத்திகுளம் மாணவி கொலை கனிமொழியின் பதிவால் கொதித்தெழும் நெட்டிசன்கள்

விளாத்திகுளம் மாணவி கொலை கனிமொழியின் பதிவால் கொதித்தெழும் நெட்டிசன்கள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த கொடூரத்தை கண்டித்து அறிக்கை வெளியிடாமல், வெறும் வேதனை மட்டும் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சொந்த தொகுதியில் நடந்த இக்கொடூரத்திற்கு கூட கண்டனம் தெரிவிக்காதது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது பெண்களுக்காக வீதியில் இறங்கி போராடிய கனிமொழி, இப்போது அண்ணன் ஆட்சியில் மௌனம் காப்பது ஏன் என நெட்டிசன்கள் சாடுகின்றனர். கடந்த சில வாரங்களில் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை தொடரும் பாலியல் அத்துமீறல்களை சுட்டிக்காட்டி, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக மக்கள் ஆவேசம் அடைந்துள்ளனர். வாக்கு வங்கி அரசியலுக்காக உண்மையை பூசி மெழுகுவதாக கனிமொழி மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *