விதிமீறல் காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்தது டிஜிசிஏ
February 14, 2026

தேவையான அனுமதி சான்றிதழ் இன்றி எட்டு முறை விமானங்களை இயக்கிய விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு டிஜிசிஏ கடும் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தில்லி, மும்பை மற்றும் பெங்களூரு இடையே உரிய தகுதிச் சான்றிதழ் இன்றி ஏர்பஸ் விமானம் இயக்கப்பட்டதை அடுத்து, பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்ததாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக டாடா குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியாவுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தவறை ஒப்புக்கொண்ட ஏர் இந்தியா நிர்வாகம், விமானிகள் மற்றும் மேலாளர்களின் கவனக்குறைவே இதற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளது.