தேர்தலில் வென்ற பின்பும் ஆட்சியில் அமர முடியாமல் தவிக்கும் பிஎன்பி

தேர்தலில் வென்ற பின்பும் ஆட்சியில் அமர முடியாமல் தவிக்கும் பிஎன்பி

வங்கதேசத்தின் 13வது பொதுத்தேர்தலில் பிஎன்பி தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும், புதிய அரசு அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. வர்த்தமானி வெளியிடுவதில் தாமதம் மற்றும் அரசியலமைப்பு ரீதியான தடைகளால் வரும் திங்கட்கிழமைக்கு முன் பதவி ஏற்பு விழா நடைபெறாது என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

தற்போது சபாநாயகர் பதவி காலியாக இருப்பதாலும், துணை சபாநாயகர் சிறையில் இருப்பதாலும் எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக தலைமை தேர்தல் ஆணையர் மூலம் இந்த நடைமுறையை முடிக்க இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *