வந்தே பாரத் ரயிலில் 1500 ரூபாய் சீட்டில் 100 ரூபாய் செருப்பு, வைரல் வீடியோவால் வெடித்தது சர்ச்சை

வந்தே பாரத் ரயிலில் 1500 ரூபாய் சீட்டில் 100 ரூபாய் செருப்பு, வைரல் வீடியோவால் வெடித்தது சர்ச்சை

வந்தே பாரத் ரயிலின் அதிகப்படியான பயணக் கட்டணத்தை கிண்டல் செய்ய முற்பட்ட பெண் பயணி ஒருவர் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். தனது கணவர் மற்றும் குழந்தையுடன் பயணம் செய்த அந்தப் பெண், தனது குழந்தைப் பெயரில் சுமார் 1,500 ரூபாய் செலுத்தி ஒரு தனி இருக்கையை முன்பதிவு செய்திருந்தார். ஆனால் பயணம் முழுவதும் குழந்தை பெற்றோரின் மடியில் தூங்கியதால் அந்த இருக்கை காலியாக இருந்தது. உடனே அந்தப் பெண் தனது 100 ரூபாய் மதிப்புள்ள செருப்பை அந்த இருக்கையில் வைத்து வீடியோ எடுத்து, ரயில்வே கட்டணக் கொள்கையை விமர்சித்து இணையத்தில் பதிவிட்டார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகளிடையே இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர் ரயில் கட்டண உயர்வுக்கு ஆதரவாகப் பேசினாலும், பெரும்பாலானோர் அந்தப் பெண்ணின் செயலை நாகரிகமற்றது என்று கண்டித்துள்ளனர். ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருக்கை முன்பதிவு செய்வது தனிப்பட்ட விருப்பம் என்றும், அதற்காகப் பொதுச் சொத்தான இருக்கையில் செருப்பை வைத்து ரயில்வேயைக் குறை கூறுவது விளம்பர மோகமே என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். பணம் கொடுத்து இருக்கை வாங்கினாலும் பயணச் சிறுமைகளை மீறுவது ஏற்கத்தக்கதல்ல எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *