வடகொரியா எல்லை அருகே அமெரிக்காவின் பிரம்மாண்ட போர் பயிற்சி மிரட்டலில் கிம் ஜாங் உன்
March 9, 2026

ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் வடகொரிய எல்லைக்கு மிக அருகில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா ‘ஃப்ரீடம் ஷீல்ட்’ எனும் பிரம்மாண்ட போர் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. மார்ச் 19 வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் 18,000 தென்கொரிய வீரர்களுடன் ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படையினரும், போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பயிற்சியை தங்கள் நாட்டின் மீதான தாக்குதல் முயற்சியாக வடகொரியா கருதுவதால் ஆசிய பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்கின்றன. இதற்கிடையில் ஈரான் போருக்காக தென்கொரியாவிடமிருந்து அமெரிக்கா ஆயுதங்களைப் பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வால் அதிபர் கிம் ஜாங் உன் கடும் கோபமடைந்துள்ளதாகத் தெரிகிறது.