ஈரான் போர் எதிரொலியால் வளைகுடா நாடுகளின் முதலீட்டு ஒப்பந்தங்கள் ரத்தாகும் அபாயம்

ஈரான் போர் எதிரொலியால் வளைகுடா நாடுகளின் முதலீட்டு ஒப்பந்தங்கள் ரத்தாகும் அபாயம்

ஈரான் மற்றும் இசுரேல் இடையிலான போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகள் தங்களின் பில்லியன் கணக்கான டாலர் முதலீடுகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் போர்க்கால நெருக்கடியால் ஏற்கனவே செய்துள்ள வணிக ஒப்பந்தங்களில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்காப்புச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி சரிவு காரணமாக வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் கடும் அழுத்தத்தில் உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து முடக்கம் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ளது. இந்தப் போர்ச் சூழல் நீடித்தால் சர்வதேச விளையாட்டு ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் அரசு முதலீடுகள் முடங்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *