வங்கதேச தேர்தல் களத்தில் இருந்து திடீரென விலகிய ஷேக் ஹசீனாவுக்கு எதிராக புரட்சி செய்த 5 மாணவர் தலைவர்கள்

வங்கதேசத்தில் பிப்ரவரி 12-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஷேக் ஹசீனா ஆட்சியை வீழ்த்துவதில் முக்கிய பங்காற்றிய ஐந்து முன்னணி மாணவர் தலைவர்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இடைக்கால அரசின் ஆலோசகராக இருந்த மஹ்ஃபூஸ் ஆலம், நீண்ட கால அரசியலை முன்னிறுத்தி இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். மற்றொரு முக்கிய முகமான ஆசிப் மஹ்மூத் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தும், தற்போது தேர்தல் களத்தில் இல்லை. இவர்களது இந்த திடீர் பின்வாங்கல் அந்நாட்டு அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பட்டியலில் உஸ்மான் ஹாதி தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் மாணவர் இயக்கத்தின் பெண் முகமான தஸ்னீம் ஜாரா மற்றும் அபு பக்கர் மஜும்தார் ஆகியோரும் தற்போதைய அரசியல் கூட்டணிகளால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். புரட்சி செய்த தலைவர்கள் தேர்தல் அரசியலில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால், இவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. புரட்சிக்கு பின் அமைந்த புதிய கூட்டணியால் ஏற்பட்ட மாற்றங்களே இவர்கள் களத்தில் இல்லாததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.