ரஷ்யா மீதான தடைகளை நீக்க ட்ரம்ப் அதிரடி முடிவு மேற்காசிய போர் பதற்றத்தால் உலக நாடுகள் அதிர்ச்சி
March 12, 2026

மேற்காசிய நாடுகளுக்கிடையிலான போர் பதற்றத்தால் ஹார்மோஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் முடங்கியுள்ளது. இந்த எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் விலையைக் குறைக்கவும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் புதினுடன் இது குறித்து அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் இந்தத் திடீர் முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ரஷ்யா மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது ஜி7 நாடுகளின் விதிமுறைகளுக்கு எதிரானது என ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது. தற்போதைய சூழலில் மேற்காசியப் போரினால் ரஷ்யா மட்டுமே அதிக ஆதாயம் அடைந்து வருவதாக ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் ஆன்டனியோ கோஸ்டா கவலை வெளியிட்டுள்ளார்.