நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு
March 12, 2026

கர்நாடகா, ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விநியோக மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை நீடிக்கிறது. குறிப்பாக ராஞ்சி மற்றும் லக்னோ போன்ற நகரங்களில் சிலிண்டர் முன்பதிவு செய்ய மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
குஜராத் போன்ற மாநிலங்களில் வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விநியோகப் பணியாளர்கள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க போராடி வரும் நிலையில், பொதுமக்கள் காலி சிலிண்டர்களுடன் நீண்ட தூரம் அலையும் சூழல் உருவாகியுள்ளது. இந்த விநியோகச் சிக்கல் எப்போது சீராகும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் தவித்து வருகின்றனர்.