ரயிலில் அதிக லக்கேஜ் கொண்டு சென்றால் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்
December 18, 2025
ரயில் பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் சுமையை எடுத்துச் சென்றால் விமான பயணத்தைப் போலவே இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி எடை வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் வகுப்பில் 35 கிலோவும் ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோவும் இலவசமாக எடுத்துச் செல்லலாம். ஏசி முதல் வகுப்பில் அதிகபட்சமாக 150 கிலோ வரை அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட அளவை விட பெரிய பெட்டிகளை இனி பயணிகள் பெட்டியில் வைக்காமல் பிரேக் வானில் முன்பதிவு செய்து அனுப்ப வேண்டும்.