சிஎஸ்கே அணியில் இணைந்த உற்சாகத்தில் சர்பராஸ் கான்
December 18, 2025

அபுதாபியில் நடைபெற்ற 2026 ஐபிஎல் ஏலத்தில் இந்திய பேட்டர் சர்பராஸ் கானை 75 லட்ச ரூபாய் அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. ஆரம்பத்தில் ஏலம் போகாத நிலையில், ஆக்சிலரேட்டட் சுற்றில் சிஎஸ்கே அவரைத் தேர்வு செய்தது. இந்த வாய்ப்பால் நெகிழ்ச்சியடைந்த சர்பராஸ், தனது மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
“எனக்கு மறுவாழ்வு அளித்த சிஎஸ்கே-விற்கு மிக்க நன்றி” என சர்பராஸ் பதிவிட்டுள்ளார். கடைசியாக 2023-ல் ஐபிஎல் விளையாடிய அவர், தற்போது உள்ளூர் போட்டிகளில் அதிரடி ஃபார்மில் உள்ளார். 2026 ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வெல்வதை தான் உறுதி செய்வேன் என அவர் ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார்.