ரயிலில் அதிக எடை கொண்ட பொருட்களைக் கொண்டு சென்றால் அபராதம்
December 17, 2025

விமான பயணத்தைப் போலவே இனி ரயில்களிலும் பயணிகள் கொண்டு செல்லும் உடைமைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடை கொண்ட பொருட்களுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயண வகுப்பு வாரியாக இந்த எடை வரம்பு மாறுபடும். ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோ வரையிலும், இரண்டாம் வகுப்பில் 35 கிலோ வரையிலும் இலவசமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் ஏசி 3 டயர் மற்றும் சேர் கார் வகுப்புகளில் அதிகபட்ச வரம்பு 40 கிலோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் எடையுள்ள பொருட்களை முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம்.