டிரம்ப் விதித்த தடையை முறியடித்து ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி

டிரம்ப் விதித்த தடையை முறியடித்து ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது கடும் தடைகளை விதித்த போதிலும், இந்தியாவுடனான ரஷ்யாவின் எரிசக்தி வர்த்தகம் தடையின்றி தொடர்கிறது. டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி நாளொன்றுக்கு 15 லட்சம் பேரல்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கத் தடையால் பாதிக்கப்படாத ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் தற்போது எண்ணெயை வாங்குகின்றன.

சர்வதேச சந்தை விலையை விட பேரலுக்கு 6 டாலர் வரை குறைவாகக் கிடைப்பதால், மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தையும் மீறி இந்தியா ரஷ்யாவிடம் தொடர்ந்து வர்த்தகம் செய்கிறது. ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் வாங்குவதை குறைத்தாலும், இந்தியன் ஆயில் போன்ற அரசு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்து தங்களின் அசைக்க முடியாத நட்புறவை நிரூபித்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *