மேற்கு வங்கத்தின் 22வது ஆளுநராக ஆர் என் ரவி இன்று பதவியேற்பு
March 12, 2026

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ஆர் என் ரவி இன்று கொல்கத்தாவில் உள்ள லோக் பவனில் மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜோய் பால் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சி வி ஆனந்த போஸ் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்ததை அடுத்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இருப்பினும் எதிர்க்கட்சியான பாஜக தரப்பிலிருந்து பிரதிநிதிகள் யாரும் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஆளுநரின் வருகை மாநில அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.