மெஸ்ஸிக்கு பல கோடி மதிப்பிலான கடிகாரத்தை பரிசளித்த அனந்த் அம்பானி
December 17, 2025

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சமீபத்தில் குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள அனந்த் அம்பானியின் ‘வந்தாரா’ வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்கு வருகை தந்தார். அங்குள்ள விலங்குகளுடன் நேரத்தை செலவிட்ட மெஸ்ஸி, அந்த மையத்தின் பராமரிப்பு பணிகளை கண்டு வியந்தார்.
இந்த சந்திப்பின் நினைவாக அனந்த் அம்பானி மெஸ்ஸிக்கு சுமார் 10.91 கோடி ரூபாய் மதிப்பிலான ‘ரிச்சர்ட் மில்லே’ ரக கடிகாரத்தை பரிசாக வழங்கினார். உலகில் வெறும் 12 எண்ணிக்கையில் மட்டுமே உள்ள இந்த அபூர்வ கடிகாரம் தற்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.