முட்டையைத் தொடக்கூடக்கூடாத நபர்கள் யார் தெரியுமா எச்சரிக்கை தரும் மருத்துவ அறிக்கை

புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த முட்டை ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்றாலும், சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது அவசியம். குறிப்பாக செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு முட்டை மெதுவாகச் செரிமானமாவதால் அஜீரணம், வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படக்கூடும். மயோ கிளினிக் அறிக்கையின்படி, செரிமான மண்டலத்தில் உணர்திறன் கொண்டவர்கள் முட்டையை உணவில் சேர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்வது ஆபத்தானது, ஏனெனில் இது இரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், வயிற்றுப்போக்கு அல்லது இன்சுலின் எதிர்ப்புத் திறன் கொண்டவர்கள் அதிகப்படியான முட்டையைத் தவிர்க்க வேண்டும். சத்தான உணவாக இருந்தாலும், தற்போதைய உடல்நிலை மற்றும் மருத்துவரின் ஆலோசனையைப் பொறுத்தே முட்டை ஆரோக்கியமானதா அல்லது தீங்கு விளைவிப்பதா என்பது அமையும்.