மாவட்ட நீதிமன்றங்களில் புதிய கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்கள் உருவாக்கி தமிழக அரசு அதிரடி உத்தரவு
March 10, 2026

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் எனும் புதிய பணியிடங்களை உருவாக்கி உள்துறை செயலாளர் தீரஜ்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் மற்றும் பணிமாற்றல் முறையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பதவிக்கு பி.எஸ்சி கம்ப்யூட்டர் அல்லது பி.சி.ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.20,600 அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இப்பதவிகள் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2ஏ தேர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.