ராமேசுவரம் மற்றும் மங்களூரு இடையே புதிய வாராந்திர ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
March 10, 2026

திருச்சியில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ராமேசுவரம் – மங்களூரு இடையேயான புதிய வாராந்திர ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். மதுரை வழியாக இயக்கப்படவுள்ள இந்த ரயிலுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. வண்டி எண் 16621 புதன்கிழமை பிற்பகல் ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை மங்களூரு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 16622 சனிக்கிழமை இரவு மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை ராமேசுவரம் வந்து சேரும். இந்த ரயில் ராமநாதபுரம், மதுரை, பழனி, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த புதிய சேவை தென் மாவட்ட மக்களின் நீண்ட கால பயணத் தேவையைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.