மாநில அரசின் அழுத்தத்திற்கு பணிந்தது தேர்தல் ஆணையம் இறுதிக்கட்டத்தில் டோமிசைல் சான்றிதழ் ஏற்க முடிவு

தமிழகத்தில் SIR பணிகளுக்காக ஏற்கனவே உள்ள 11 ஆவணங்களுடன் டோமிசைல் அல்லது நிரந்தர குடியிருப்பு சான்றிதழை ஏற்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆளும் கட்சியின் தொடர் கோரிக்கையை அடுத்து சனிக்கிழமை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. பீகாரைப் போலவே இங்கும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்திய நிலையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ்களை அங்கீகரிப்பதில் ஆணையம் சில கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. மாவட்ட ஆட்சியர், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் கையொப்பமிட்ட சான்றிதழ்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 15 முதல் 20 ஆண்டுகள் ஒரே பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த சான்றிதழை சமர்ப்பிக்க தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.