எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய அனில் அம்பானி ரகசிய உரையாடல் அம்பலம்

அமெரிக்காவின் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள் தற்போது வெளியாகி உலகையே அதிரவைத்து வருகின்றன. இதில் இந்தியத் தொழிலதிபர் அனில் அம்பானியின் பெயர் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் இருவரும் குறுஞ்செய்திகள் மூலம் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், பல்வேறு ரகசிய விஷயங்கள் குறித்து விவாதித்ததும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குறிப்பாக ஒரு உரையாடலில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை ஏற்பாடு செய்வது குறித்து எப்ஸ்டீன் கூற, அதற்கு அனில் அம்பானி உடனடியாகச் சம்மதம் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் நியூயார்க்கில் சந்திக்கத் திட்டமிட்டதாகவும் அந்த அறிக்கைகள் கூறுகின்றன. இந்த விவகாரம் குறித்து அம்பானி தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.