கான்பூரில் சொகுசு லம்போர்கினி கார் மோதி பயங்கர விபத்து தப்பியோட முயன்ற தொழிலதிபர் மகனுக்கு தர்மஅடி

கான்பூரில் சொகுசு லம்போர்கினி கார் மோதி பயங்கர விபத்து தப்பியோட முயன்ற தொழிலதிபர் மகனுக்கு தர்மஅடி

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் அதிவேகமாக வந்த ரூ. 10 கோடி மதிப்பிலான லம்போர்கினி கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மற்றும் பைக் மீது மோதியது. இதில் பைக் ஓட்டி வந்த வாலிபர் 10 அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். புகையிலை தொழிலதிபர் கே.கே.மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ரா ஓட்டி வந்த இந்த கார் மோதியதில் மொத்தம் 6 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய சிவம் மிஸ்ரா அங்கிருந்து தப்பியோட முயன்றபோது ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். காரின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவம் மிஸ்ராவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஏற்கனவே வருமான வரி சோதனையில் சிக்கிய இவரது சொகுசு கார்கள் தற்போது மீண்டும் விபத்தின் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *