மருந்துகள் விலை 20 சதவீதம் வரை உயரும் அபாயம் பொதுமக்களுக்கு கலக்கம்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரினால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் இந்தியாவில் மருந்துப் பொருட்களின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. ஐரோப்பாவிலிருந்து வரும் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் அரபு நாடுகளின் மூலப்பொருட்கள் நீண்ட தூரம் சுற்றி வருவதால் கப்பல் போக்குவரத்து கட்டணம் அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் மருந்து பேக்கிங் செலவுகளும் உயர்ந்துள்ளன.
தற்போது கையிருப்பில் உள்ள மருந்துகள் பழைய விலையிலேயே விற்கப்பட்டாலும் மார்ச் இறுதிக்குள் புதிய விலை உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கான மருந்துகள் விலை உயரும் அபாயம் உள்ளது. மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முயன்றாலும் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.