மருத்துவமனையில் புஷ்பா பட பாடலுக்கு செவிலியர்கள் போட்ட குத்தாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரல்

மருத்துவமனையில் புஷ்பா பட பாடலுக்கு செவிலியர்கள் போட்ட குத்தாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரல்

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் செவிலியர்கள் மெர்சி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் ‘ஊ அண்ட்டாவா’ பாடலுக்கு நடனமாடினர். நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருந்த வேளையில், பொறுப்பின்றி செயல்பட்ட இவர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள், பணியில் அலட்சியம் காட்டிய அந்த இரண்டு செவிலியர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். மேலும், அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 16 ஊழியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *