மத்திய கிழக்கு போர் தீவிரமடைவதால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என ஐநா கவலை

மத்திய கிழக்கு போர் தீவிரமடைவதால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என ஐநா கவலை

ஈரான் மற்றும் அமெரிக்க இஸ்ரேல் இடையிலான போர் 14வது நாளை எட்டியுள்ள நிலையில் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். வளைகுடா நாடுகளில் நிலவும் இந்த மோதல் பொதுமக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியான முயற்சிகளின் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர் அனைத்து நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *