போர் மேகங்களுக்கு மத்தியில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுக்க இந்தியாவின் ரகசிய நிலத்தடி குகைகள்

போர் மேகங்களுக்கு மத்தியில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுக்க இந்தியாவின் ரகசிய நிலத்தடி குகைகள்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தனது பாதுகாப்பு அரணை பலப்படுத்தியுள்ளது. அவசர காலத் தேவையை கருத்தில் கொண்டு ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் கர்நாடகாவின் மங்களூரு, படூர் ஆகிய மூன்று இடங்களில் ரூ.4,100 கோடி செலவில் பிரம்மாண்ட நிலத்தடி சேமிப்பு குகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரகசிய குகைகளில் சுமார் 5.33 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை பாதுகாப்பாக சேமிக்க முடியும். இது நாட்டின் ஒட்டுமொத்த தேவையை சுமார் 10 நாட்களுக்கு பூர்த்தி செய்யும் திறன் கொண்டது. இயற்கை பேரிடர் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் பாதிக்கப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளம், நெருக்கடி காலங்களில் நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *