மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் விளம்பரத்திற்காக ஆட்டோக்களை முன்பதிவு செய்ய அரசியல் கட்சிகள் போட்டி

மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் விளம்பரத்திற்காக ஆட்டோக்களை முன்பதிவு செய்ய அரசியல் கட்சிகள் போட்டி

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு மதுரையில் ஆட்டோ பிரச்சாரத்திற்கான மவுசு அதிகரித்துள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல ஆட்டோக்களை போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். குறுகிய சந்து பொந்துகளிலும் எளிதாகச் சென்று விளம்பரம் செய்ய முடிவதால் இந்த மொபைல் விளம்பர முறைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தேர்தல் காலத்தை முன்னிட்டு ஆட்டோ விளம்பரங்களுக்கான கட்டணம் வழக்கத்தை விட 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஒரு ஆட்டோவிற்கு மாதந்தோறும் 10,000 முதல் 30,000 ரூபாய் வரை செலவிடப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் 40 லட்ச ரூபாய் செலவு வரம்பிற்குள் இந்த பிரச்சாரங்களை முடிக்க திட்டமிடும் கட்சிகள், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தொண்டர்களுக்கு குளிர்பானங்களையும் வழங்கி வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *