ஐந்து வருஷம் எங்க போனீங்கன்னு யாரும் கேட்க முடியாது என தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி
March 11, 2026

தூத்துக்குடியில் நடைபெற்ற முஸ்லீம் லீக் கட்சியின் 79-வது ஆண்டு விழா மற்றும் இஃப்தார் நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொகுதி மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருவதால், தான் எங்கே சென்றேன் என்று கேட்கும் நிலை யாருக்கும் வரவில்லை எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
பாஜகவின் பிரிவினைவாத அரசியலை முறியடிக்க திமுகவினர் சோர்வின்றி உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களையும், தொழில் முதலீடுகளையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், வரும் தேர்தல்களில் திமுக கூட்டணி மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என உறுதிபடத் தெரிவித்தார்.