மதுரை சரவணப் பொய்கையில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பரிதாப பலி

மதுரை சரவணப் பொய்கையில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பரிதாப பலி

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சரவணப் பொய்கையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற முத்துப்பட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவன் பாலா சந்துரு நீரில் மூழ்கி உயிரிழந்தார். நேற்று மாலை ஐந்துக்கும் மேற்பட்ட நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அவர் நீரிலிருந்து மீள முடியாமல் நண்பர்களின் கண்முன்னே நீரில் மூழ்கினார்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மாணவனின் உடலை மீட்டனர். தற்போது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *