விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி கொடுத்த ஆதரவு திடீர் ரத்து

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி கொடுத்த ஆதரவு திடீர் ரத்து

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளித்து வந்த ஆதரவை ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது. கடந்த எட்டு மாதங்களாக இணைந்து பயணித்த நிலையில், கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டதே இந்த முடிவுக்கு காரணம் என அக்கட்சியின் தலைவர் எம்.எப். தமீம் தெரிவித்துள்ளார். குறிப்பாக கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ள இக்கட்சி, தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கேட்டுள்ளது. ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி விலகினாலும், தமிழ்நாடு முஸ்லீம் லீக் மற்றும் எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *