மகனின் கடிதத்தை ரகசியமாகப் படித்த தந்தை நீதிமன்றம் விதித்த அதிரடி சிறைத்தண்டனை
December 29, 2025

ஸ்பெயினின் செவில் நகரில் 10 வயது மகனின் தனிப்பட்ட கடிதத்தை அனுமதியின்றி படித்த தந்தைக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. சிறுவனின் அத்தை எழுதிய அந்த கடிதத்தில், தந்தையின் கடந்த கால நடத்தைகள் குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்தது. குழந்தையின் தனிப்பட்ட சுதந்திரத்தை மீறியதற்காக தந்தைக்கு சிறைத்தண்டனையுடன் சுமார் 2.33 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தந்தை தரப்பில் இது தற்செயலாக நடந்தது என்று வாதிடப்பட்டாலும், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. பாதுகாவலராக இருந்தாலும் குழந்தையின் அந்தரங்க உரிமைகளில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த விசித்திரமான வழக்கு தற்போது பெற்றோரின் எல்லைகள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது.