புற்றுநோயுடன் போராடி வந்த ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ரன்யான் காலமானார்
March 10, 2026

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ரன்யான் தனது 65 ஆவது வயதில் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். இந்த துயரச் செய்தியை அவரது நெருங்கிய தோழி எரின் மர்பி சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ஜெனிபரின் மறைவு ஹாலிவுட் திரையுலகினர் மற்றும் உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1980களில் திரைப்பயணத்தைத் தொடங்கிய இவர் ‘கோஸ்ட்பஸ்டர்ஸ்’ திரைப்படம் மற்றும் ‘சார்லஸ் இன் சார்ஜ்’ தொடர் மூலம் உலகப் புகழ்பெற்றார். மேலும் ’18 அகைன்’ உள்ளிட்ட பல படைப்புகளில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது தனித்துவமான பாணியால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜெனிபர் ரன்யான் என்றும் நினைவுகூரப்படுவார்.