சர்வதேச போர் சூழலால் கேஸ் தட்டுப்பாடு என சு வெங்கடேசன் எம்பி எச்சரிக்கை
March 10, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் இந்தியாவில் எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தட்டுப்பாட்டை தவிர்க்க ஒரு சிலிண்டர் பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும் என்ற புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் கூறுகையில் சர்வதேச அரசியல் மாற்றங்கள் நம் வீட்டு அடுப்பங்கரை வரை எதிரொலிக்கத் தொடங்கிவிட்டதாக கவலை தெரிவித்துள்ளார். வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் சிக்கலை சந்திக்கும் நிலையில், நிலைமையை ஆய்வு செய்ய எண்ணெய் நிறுவனங்களின் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.