புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு இழுபறி
March 13, 2026

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற ஆளும் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு பேசிய முதல்வர், பாஜக மேலிடப் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா முன்னிலையில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் இந்த கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்குத் தனக்குத் தெரியாது என அவர் பதிலளித்தார். இருப்பினும், பாஜகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.