புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று மார்ச் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் தேர்வுகள் தடையின்றி நடைபெறும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவிழாவில் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *