ஈரான் போர் எதிரொலியால் அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை
March 9, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள ஈரான் மீதான போர் நடவடிக்கைகளால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத இந்த அதிரடி விலையேற்றத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை அதிகாலையிலேயே கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
உலகின் முக்கிய எரிசக்தி விநியோக பாதையான ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து நிறுத்தப்பட்டதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். போர் சூழல் மார்ச் இறுதி வரை நீடித்தால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 150 டாலர் வரை உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது விமான எரிபொருள் மற்றும் உரங்களின் விலையையும் பாதித்து உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.