பிரம்மபுத்திராவில் சீனாவின் நீர் வெடிகுண்டு இமயமலையில் உருவாகும் உலகின் மிகப்பெரிய அணைத் திட்டம்

பிரம்மபுத்திராவில் சீனாவின் நீர் வெடிகுண்டு இமயமலையில் உருவாகும் உலகின் மிகப்பெரிய அணைத் திட்டம்

திபெத்தின் யார்லுங் சாங்போ (பிரம்மபுத்திரா) நதியில் சுமார் 168 பில்லியன் டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்தை சீனா உருவாக்கி வருகிறது. இது த்ரீ கோர்ஜஸ் அணையை விட மூன்று மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது. நிலநடுக்க அபாயம் உள்ள இமயமலைப் பகுதியில் கட்டப்படும் இந்த அணை, இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள இந்த ‘YX திட்டம்’ குறித்து சீனா தெளிவான விவரங்களை வெளியிடவில்லை. இந்த அணை மூலம் நதி நீரை சீனா கட்டுப்படுத்தினால், அது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் செயற்கை வெள்ளத்தை ஏற்படுத்தும் “நீர் வெடிகுண்டாக” மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் கடுமையாக பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *