பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்களை விரட்டிப் பிடித்த துணிச்சலான மாணவி
March 10, 2026

நெல்லை மாவட்டம் களக்காட்டில் டியூஷன் முடிந்து வீடு திரும்பிய 12-ஆம் வகுப்பு மாணவியை பைக்கில் வந்த இரு இளைஞர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு மக்கள் திரண்டதும், அந்த நபர்கள் தப்பிச் சென்றனர். ஆனால் சற்றும் அஞ்சாத அந்த மாணவி, தனது தந்தையுடன் பைக்கில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் அந்த வாலிபர்களை விரட்டிச் சென்றார்.
மாவடி பகுதியில் அவர்களை மறித்தபோது, இளைஞர்கள் தப்பியோடி தோட்டத்தில் மறைந்தனர். விடாமல் துரத்திய மாணவியும் அவரது தந்தையும் பொதுமக்களுடன் இணைந்து ஒருவனைப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வட்டக்குளத்தைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் சரவணன் என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்த திருக்குறுங்குடி போலீசார், சினிமாவை மிஞ்சும் வகையில் செயல்பட்ட மாணவியின் வீரத்தைப் பாராட்டி வருகின்றனர்.