பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட இந்தியாவுக்கு ஐசிசி அழுத்தம் தருமா மொஹ்சின் நக்வியின் அதிரடி நிபந்தனை

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட இந்தியாவுக்கு ஐசிசி அழுத்தம் தருமா மொஹ்சின் நக்வியின் அதிரடி நிபந்தனை

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாட பிசிபி மூன்று முக்கிய நிபந்தனைகளை ஐசிசியிடம் முன்வைத்துள்ளது. குறிப்பாக இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு கிரிக்கெட் உறவுகளை மீண்டும் தொடங்க ஐசிசி உதவ வேண்டும் என்றும், வருவாய் பங்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி வலியுறுத்தியுள்ளார்.

ஆசியக் கோப்பையில் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்த விவகாரத்தை சுட்டிக்காட்டிய நக்வி, விளையாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார். தற்போது பாகிஸ்தான் அரசின் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கும் நிலையில், இது குறித்து பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புடன் ஆலோசித்து அடுத்த 24 மணிநேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *