டெல்லியில் இன்று நடக்கும் முக்கிய பாதுகாப்பு பேச்சுவார்த்தை: இந்தியா மற்றும் கிரீஸ் இடையே அதிரடி ஒப்பந்தம்

டெல்லியில் இன்று நடக்கும் முக்கிய பாதுகாப்பு பேச்சுவார்த்தை: இந்தியா மற்றும் கிரீஸ் இடையே அதிரடி ஒப்பந்தம்

பாதுகாப்பு துறையில் இந்தியா மற்றும் கிரீஸ் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று டெல்லியில் கிரீஸ் பாதுகாப்பு அமைச்சர் நிகோலாவோஸ் டெண்டியாஸை சந்தித்துப் பேசுகிறார். டெல்லி மானேக்ஷா மையத்தில் நடைபெறும் இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, கிரீஸ் அமைச்சர் நிகோலாவோஸ் ஏற்கனவே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான சில வாரங்களிலேயே இந்த முக்கிய சந்திப்பு நடைபெறுவது, ஆசிய மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *