பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்
December 18, 2025

பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சஞ்சய் குமார் என்ற அந்த ஆசிரியர், மாணவிகளை மசாஜ் செய்யச் சொல்லி அழைத்து தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனை எதிர்த்த மாணவிகளை அவர் மிரட்டியதோடு தண்டனையும் வழங்கியுள்ளார். இந்த விவகாரம் ஊர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து தலைமை ஆசிரியர் தப்பியோடிவிட்டார். தற்போது காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.