பலுசிஸ்தான் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த ஜனவரி 31 அன்று நடத்தப்பட்ட தொடர் தற்கொலை படைத் தாக்குதல்களை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வன்மையாகக் கண்டித்துள்ளது. பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இந்த வன்முறைக்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், இந்திய அரசு அதனை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இதற்கிடையில், கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான பாகிஸ்தான் இராணுவத்தின் நடவடிக்கையில் 216 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுடன் துணை நிற்பதாக அமெரிக்கா தனது அறிக்கையில் உறுதிபடக் கூறியுள்ளது.