பட்டுக்கோட்டை அரசு பள்ளியில் மாணவிகளை கடித்து குதறிய வெறிநாய்
March 11, 2026

பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பாக, பள்ளி வளாகத்திற்குள் புகுந்த வெறிநாய் ஒன்று படித்துக் கொண்டிருந்த ஆறு மாணவிகளை கடித்துக் குதறியது. இந்த எதிர்பாராத தாக்குதலால் பள்ளி மாணவிகளிடையே பெரும் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது. சாலையில் சென்ற பொதுமக்களையும் கடித்த அந்த நாய் பின்னர் நகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டது.
காயமடைந்த மாணவிகள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சிகிச்சைக்குப் பின் துணிச்சலுடன் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகத்தில் நடமாடும் மருத்துவக் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.