அடையாளத்தை மறைத்துக்கொண்டு ரயிலின் சாதாரண ஏசி கோச்சில் பயணித்த உலகக்கோப்பை நாயகன் சிவம் துபே
March 11, 2026

டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு அகமதாபாத்தில் இருந்து மும்பை செல்ல விமானம் கிடைக்காததால், சிவம் துபே மூன்றாம் வகுப்பு ஏசி ரயிலில் பயணிக்க முடிவு செய்தார். ரசிகர்கள் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்து அவர் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டார். இந்த பயணத்தின் போது டிக்கெட் பரிசோதகர் கேட்டபோது கூட அவர் சிக்காமல் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு குறித்து குடும்பத்தினர் கவலைப்பட்ட நிலையில், ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே அவர் கோச்சிற்குள் நுழைந்தார். டிக்கெட் பரிசோதகர் சந்தேகத்துடன் கேட்டபோது, துபேவின் மனைவி சமயோசிதமாக பதிலளித்து அவரை அனுப்பி வைத்தார். இறுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் ரயில் நிலையத்திலிருந்து பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.