ன்று நாணயங்கள் வீசினால் திருமணம் நிச்சயம்! ரோமின் புகழ்பெற்ற நீரூற்றில் இனி நுழைய கட்டணம்!

ன்று நாணயங்கள் வீசினால் திருமணம் நிச்சயம்! ரோமின் புகழ்பெற்ற நீரூற்றில் இனி நுழைய கட்டணம்!

ரோமின் வரலாற்றுச் சிறப்புமிக்க ட்ரெவி நீரூற்றில் நாணயங்களை வீசினால் மீண்டும் அங்கு வரலாம், காதலிக்கலாம் அல்லது திருமணம் கைகூடும் என்பது உலகளாவிய நம்பிக்கை. இதன் காரணமாக தினசரி சுமார் 3,000 யூரோக்கள் வரை இங்கு சேகரிக்கப்படுகின்றன. இந்தத் தொகை ‘கரிட்டாஸ்’ தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழை எளிய மக்களின் நலத்திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சுற்றுலாப் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, இந்த மாதத்திலிருந்து புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இனி நீரூற்றின் மிக அருகில் சென்று நாணயங்களை வீச விரும்பும் பார்வையாளர்கள் 2 யூரோ நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட தூரத்தில் இருந்து இந்த அழகிய பரோக் பாணி நீரூற்றைக் காண்பதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *