நைஜீரியாவில் அதிவேகமாக சென்ற லாரி கவிழ்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் பலி

நைஜீரியாவில் அதிவேகமாக சென்ற லாரி கவிழ்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் பலி

நைஜீரியாவின் கானோ மாநிலத்தின் கெஜாவா பகுதியில் அதிவேகமாகச் சென்ற சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சுமார் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பயணிகளையும் பொருட்களையும் ஏற்றிச் சென்ற அந்த வாகனம், குஜுங்கு நகரை நோக்கிச் சென்றபோது கோவானார் பர்டே அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்தது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஆளுநர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. விபத்திற்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் எனத் தெரிவித்துள்ள ஆளுநர் அப்பா கபீர் யூசுப், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *