நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ரிஷப் பண்ட் மற்றும் இரு முக்கிய வீரர்கள் நீக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ரிஷப் பண்ட் மற்றும் இரு முக்கிய வீரர்கள் நீக்கம்

புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்த மூத்த வீரர்களை ஒருநாள் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. எனினும் ஹர்திக் பாண்டியா விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக செயல்பட்ட இஷான் கிஷன் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. ஜனவரி 3 அல்லது 4 தேதிகளில் நடைபெறவுள்ள தேர்வுக் குழு கூட்டத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *