நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை வேட்பாளர்கள் வெற்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சாதனை
February 13, 2026

வங்கதேசத்தின் 13-வது நாடாளுமன்றத் தேர்தலில் பிஎன்பி கட்சி சார்பில் போட்டியிட்ட நான்கு சிறுபான்மை வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். டாக்கா-3 தொகுதியில் கயேஸ்வர் சந்திர ராய் மற்றும் மகுரா-2 தொகுதியில் அவரது நெருங்கிய உறவினர் நிதாய் ராய் சௌத்ரி ஆகியோர் வெற்றி வாகை சூடினர். இவர்களுடன் மலைப்பகுதிகளில் இருந்து சாச்சிங் ப்ரூ மற்றும் தீபன் திவான் ஆகியோரும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்தலில் மொத்தம் 79 சிறுபான்மை வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் பிஎன்பி நிறுத்திய ஆறு பேரில் நான்கு பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் என்சிபி வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர். 299 தொகுதிகளில் இந்த நான்கு பிரதிநிதிகளின் வெற்றி அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.